search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி புழுதி புயல்"

    சண்டிகரில் புழுதிப்புயல் காரணமாக விமான நிலைய ஓடுபாதை சரியாக தெரியாத நிலையில், இன்று 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #DustStorm #ChandigarhAirport #FlightsCancelled
    சண்டிகர்:

    தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை கடந்த மாதம் தாக்கிய புழுதி புயல் காரணமாக போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புழுதிப் புயலைத் தொடர்ந்து டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதேபோல் சண்டிகரில் நேற்று புழுதிப் புயல் காரணமாக மோசமான வானிலை நிலவியது.

    விமான நிலையத்தின் ஓடுபாதை தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டது. பார்வை திறன் தூரம் மிகவும் குறைந்ததால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. 

    இந்நிலையில் சண்டிகரில் இன்றும் புழுதிப் புயல் காரணமாக ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலையில் திடீர் மாற்றம் ஏற்படும் என்றும், புழுதிக் காற்றுடன் மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #DustStorm  #ChandigarhAirport #FlightsCancelled
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் புழுதிப் புயலுடன் கொட்டித் தீர்த்த கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்தனர். #lightningstrikesinUP #26killedinduststorms
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு புழுதிப் புயல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சில மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குதல் சார்ந்த விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    ஜாவ்ன்பூர் மற்றும் சுல்தான்பூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், உன்னாவ் மாவட்டத்தில் 4 பேரும், சன்டவுலி மற்றும் பஹ்ராய்ச் மாவட்டங்களில் தலா 3 பேரும், ரேபரேலி மாவட்டத்தில் இருவரும், மிர்சாபூர், சிதாபூர், அமேதி மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் தலா ஒருவரும் மழைசார்ந்த விபத்துகளுக்கு பலியானதாக தெரியவந்துள்ளது.

    இந்த மரணங்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் அரசு நிவாரண நிதி உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேருவதை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் எவ்வித கால தாமதத்தையும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    #lightningstrikesinUP #26killedinduststorms
    தலைநகர் டெல்லியில் இடி, மின்னலுடன் இன்று மாலை பெய்துவரும் கனமழை காரணமாக தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.

    மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.

    சூறைக்காற்றை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதும், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் இருந்து பிறபகுதிகளுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் பிறபகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted 
    வெயிலின் தாக்கத்தால் வியர்த்து, விறுவிறுத்து விழிபிதுங்கி திண்டாடிய டெல்லி மக்கள் இன்று மாலை திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் வீசிய புழுதிப் புயலால் அதிர்ச்சி அடைந்தனர். #DuststormhitDelhi
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.

    மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 

    குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது. #DuststormhitDelhi 
    ×